Last Updated:
கடும் குளிரான கடல் நீரில் சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து நீந்தி, கரைக்கு சென்று அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
நடுக்கடலில் சிக்கிய குடும்பத்தை 4 மணி நேரம் நீந்தி காப்பாற்றிய 13 வயது சிறுவனின் வீரமிக்க செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் குயிண்டாலப் என்ற இடத்தில் ஆஸ்டின் ஆப்பல்பீ என்ற 13 வயது சிறுவன், அவனது தாய் ஜோன், தம்பி போ, தங்கை கிரேஸ் ஆகியோருடன் சுற்றுலா சென்றிருந்தார். அவர்கள் ஜியோகிராஃப் விரிகுடாவில் படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்றும், ராட்சத அலைகளும் அவர்களை நடுக்கடலுக்கு இழுத்துச் சென்றன.
நடுகடலில் தத்தளித்த தனது குடும்பத்தினரை தாம் தான் காப்பாற்றியாக வேண்டும் என்பதை உணர்ந்த ஆஸ்டின், உதவி கோருவதற்காக கரைக்குச் செல்ல முடிவெடுத்தான். கடும் குளிரான கடல் நீரில் சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து நீந்தி, கரைக்கு சென்று அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.


