கடவுளுக்கு நாம் எந்த பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோமோ, அதற்கு ஏற்ப நல்ல பலன்கள் கிடைக்கும். அபிஷேக படைப்புப் பொருட்களும் பலன்களும் வருமாறு:–பழவகைகள் – ஜனவசியம்.பஞ்சாமிர்தம் – வெற்றி, நீண்ட ஆயுள்.பால் – ஆயுள் விருத்தி.தயிர் – திடகாத்திரம்.தேன் – குரல் வளமை.நெய் – சுகவாழ்வு, மோட்சம்.கரும்பு, சர்க்கரை – பகைவரை அழிக்கும்.இளநீர் – நன்மக்கட்பேறு, போகம்.விபூதி – ஞானம்.சந்தனம் – சொர்க்க போகம்.பன்னீர் – புகழ்.வஸ்திரம் – வெகுமதி.மலர் – சந்தோஷம்.கற்பூரம் – அத்வைத முத்தி.குங்குமம் – மங்கலம்.மாப்பொடி – கடனை தீர்க்கும்.இறைவனுக்கு நாம் அபிஷேகங்கள் செய்வதன் மூலம் எல்லா செல்வங்களும் பெற்று வளமான வாழ்வு வாழலாம். இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களை நாம் பார்ப்பதனால் நம் வாழ்வில் மிகச் சிறப்பான பலனைப் பெறலாம்.
The post அபிஷேகப் பொருள்களும், பலன்களும் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

