• Login
Wednesday, February 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?

GenevaTimes by GenevaTimes
February 4, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த சில மாதங்களாகவே, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் தங்கம் விலை மாற்றத்தைச் சந்தித்து வருகிறது.

அவர் சீனாவைச் சீண்டும் போதெல்லாம் தங்கம் விலை தாறுமாறாக எகிறியது.

வெனிசுலா அதிபர் மதுரோவை அவரது கோட்டைக்கே சென்று அமெரிக்கா கைது செய்தபோதும்… கிரீன்லேண்டிற்கு ட்ரம்ப் குறி வைத்தபோதும் தங்கம் விலை உச்சத்தை அல்ல… நிறைய உச்சங்களைச் சந்தித்தது.

சமீப மாதங்களில், தங்கம் விலை உச்சத்தைத் தொட்ட போதெல்லாம், வழக்கத்திற்கு மாறாக, நம் வீட்டுப் புலம்பல்களில் ‘ட்ரம்ப்’ பெயரும் சேர்த்து ஒலித்தது.

அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலர்
‘ஆகஸ்ட்’ மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail

அப்படி ட்ரம்பிற்கும், தங்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வி எல்லாருக்குள்ளும் உள்ளது. அதற்கான பதில்தான் இது…

“வர்த்தகத்திற்கு உலக அளவில் அமெரிக்க டாலர்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுவாகவே ஒவ்வொரு நாட்டின் நாணயங்களின் மதிப்பும் அந்த நாட்டின் பணவீக்கம், மத்திய வங்கி, பொருளாதாரம், வர்த்தகத்தைப் பொறுத்து அமையும்.

இதற்கு அமெரிக்க டாலர்களும் விதிவிலக்கு அல்ல.

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித மாற்றம் என்ன செய்தது?

2025-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி மூன்று முறை வட்டி விகிதத்தைக் குறைத்தது. இதற்கு அங்குள்ள பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மையும் முக்கிய காரணம்.

வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது, மக்கள் கடன் வாங்கி செலவு செய்வார்கள். நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால், பணவீக்கமும் குறையும்.

இன்னொரு பக்கம், கடன் வாங்கி புதிய பிசினஸ் தொடங்குவார்கள் அல்லது இருக்கும் பிசினஸை விரிவுபடுத்துவார்கள். இதனால், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஆகும்.

வட்டி குறைப்பு - அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி
வட்டி குறைப்பு – அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி
இந்தியா: சீனா, பாகிஸ்தானை விட குறைவு; ஜப்பானை விட அதிகம்! – பிற நாடுகளுக்கு ட்ரம்பின் வரி எவ்வளவு?

ஆனால், பணப்புழக்கம் அதிகரிக்கும்போது, டாலருக்கான மவுசு குறையும். காரணம், சப்ளை அதிகரிக்கும்போது, டிமாண்ட் தானாகக் குறையும்தானே.

இதனால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்கள் குறையும்போதெல்லாம், அமெரிக்க டாலரின் மதிப்பு தள்ளாடியது.

ட்ரம்பின் பரஸ்பர வரி

கடந்த ஏப்ரல் மாதம், பெரும்பாலான நாடுகளின் மீது பரஸ்பர வரியைப் போட்டுத் தள்ளினார் ட்ரம்ப். இதனால், உலக அளவில் நிலையற்ற தன்மை உருவாகியது.

உலக நாடுகள் பிற சந்தைகளை நோக்கி, தங்களது வர்த்தகத்தை விரிவாக்கத் தொடங்கின.

இதுவும் அமெரிக்க டாலரின் மதிப்பை ஆட்டம் காணச் செய்தது.

முன்னர் சொன்னதுதான், உலக நாடுகள் வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்தி வருகின்றன.

அமெரிக்க டாலர் மதிப்பு குறையும்போது, அதை யாரும் வைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் தானே.

ட்ரம்ப் அடிக்கடி… புதுப்புது… அதிர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிடுகிறார். இது அமெரிக்கச் சந்தையைப் பாதிக்கிறது… உலக அளவில் நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது… கூடவே, அமெரிக்க டாலரின் மதிப்பையும் குறைக்கிறது.

இதனால், ஒரு பாதுகாப்பான முதலீடு முக்கியம் என்று உலக நாடுகள் தங்கத்தின் பக்கம் திரும்பின.

ட்ரம்ப்
ட்ரம்ப்
Sovereign Gold Bond வைத்திருக்கிறீர்களா? – பட்ஜெட் அறிவிப்பு படி, யாருக்கு வரி? யாருக்கு வரி இல்லை?

உலக அளவில் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தன. டாலரின் மதிப்பும் சரியாக இல்லை. இதனால், முதலீட்டாளர்களும் தங்கத்தின் பக்கம் தங்களது முதலீடுகளைத் திருப்பினர்.

ஆக, அனைவருமே தங்கத்தின் பக்கம் திரும்பும்போது, தங்க விலை ஏறியது.

உலகத்தில் இருக்கும் 90 சதவிகிதத்திற்கும் மேலான தங்கம் தோண்டி எடுக்கப்பட்டு விட்டது என்று தரவுகள் கூறுகின்றன. டிமான்ட் அதிகமாகிக் கொண்டே போகின்றன. ஆனால், சப்ளை குறைவாகத்தான் இருக்கிறது. இதுவும் தங்கத்தின் விலையை ஏற்றியது.

‘பெரிய அண்ணன்’ அமெரிக்கா

அமெரிக்கா உலக நாடுகளின் ‘பெரிய அண்ணன்’ என்று கூறப்படுகிறது. பெரிய அண்ணன் புதுப்புது அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டது…. அவை உலக அளவில் நிலையற்ற தன்மை உருவாக்கியது.

பெரிய அண்ணனின் நாணயம் தள்ளாடியது என்பதுதான் ஒட்டுமொத்த தங்க விலை ஏற்றத்திற்குப் பின்னணி.

ஆக, ‘ட்ரம்ப்’ என்ற நபரால் தங்க விலை உயரவில்லை. அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு பெரிய அண்ணன் என்பதால் தங்க விலை ஏறியது.

அமெரிக்காவில் நிலையற்ற தன்மை ஏற்படும்போதுதான், தங்க விலை உயருமா என்று கேட்டால், ‘இல்லை’ என்பதுதான் பதில்.

தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை உயர்வு
Budget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் – தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன?

சமீப உதாரணம்… 2023-ம் ஆண்டை எடுத்துக்கொள்வோம். அந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்தது.

ஆனால், ஜூலைக்குப் பின், இறங்குமுகத்தில் சென்றது. அந்த அக்டோபர் 7-ம் தேதிதான், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் தொடங்கியது. அதன் பின், தங்கம் விலை ஏறத்தொடங்கியது.

எந்த நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட்டாலும்… எந்த நாடு உலக அளவில் நிலையற்றத் தன்மையை ஏற்படுத்தினாலும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நோக்கிச் செல்வார்கள்.

முதலீடுகள் ஒருபக்கத்தை நோக்கிச் செல்லும்போது, அது ஏறுமுகத்தைக் காணும்.

இதுதான் தங்கம் விலை ஏற்றத்திற்கான காரணம்.

Budget 2026: இனி ‘இதற்கு’ வரி இல்லை, குறையும் TCS, புதிய சட்டம் அமல்; வரி அறிவிப்புகள் என்னென்ன?

Read More

Previous Post

சுதந்திர தினத்தையொட்டி 9,158 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு – Sri Lanka Tamil News

Next Post

மறுசுழற்சிக்காக விற்கபடாத உணவினை கழுவிய தொழிலாளியின் வைரல் வீடியோ: இரு வாரங்களுக்கு மூடப்பட்ட உணவகம் | Makkal Osai

Next Post
மறுசுழற்சிக்காக விற்கபடாத உணவினை கழுவிய தொழிலாளியின் வைரல் வீடியோ: இரு வாரங்களுக்கு மூடப்பட்ட உணவகம் | Makkal Osai

மறுசுழற்சிக்காக விற்கபடாத உணவினை கழுவிய தொழிலாளியின் வைரல் வீடியோ: இரு வாரங்களுக்கு மூடப்பட்ட உணவகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin