• Login
Wednesday, February 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சீன விவகாரம் குறித்து பேச தடுப்பது ஏன்? – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 3, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சீன விவகாரம் குறித்து பேச தடுப்பது ஏன்? – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 03, 2026 4:29 PM IST

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2வது நாளாக நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் சீன விவகாரம் குறித்து பேச ஏன் தடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, இந்தியா – சீனா இடையே என்ன நடந்தது, அதற்கு பிரதமர் என்ன எதிர்வினையாற்றினார் என்பதை தான் பதிவு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2வது நாளாக நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே பற்றிய கட்டுரையை குறிப்பிட்டு இந்தியா – சீனா இடையிலான உறவு குறித்து கேள்விகளை எழுப்பினார்.

மேலும், குடியரசுத் தலைவரின் உரையில் தேசிய பாதுகாப்பு மற்றும் சீனா, பாகிஸ்தான் உடனான உறவு முக்கியத்துவம் பெற்றிருந்ததாக கூறிய ராகுல் காந்தி, முன்னாள் ராணுவத் தளபதியின் கட்டுரை பிரதமரை குறித்து பேசுவதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச அரங்கில் அமெரிக்கா – சீனா இடையே பிரச்சனை நிலவி வரும் சூழலில், இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மேலும், கைலாஷ் மலைப்பகுதியில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே என்ன நடந்தது, அதற்கு பிரதமர் மோடி என்ன எதிர்வினையாற்றினார் என்பதை பதிவு செய்ய விரும்புவதாக தெரிவித்த ராகுல் காந்தி, அதுகுறித்து பேச ஏன் தடுக்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: ”இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல” அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிபணிந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்த ராகுல் காந்தி, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்திலும், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திலும் உள்ள அழுத்தம் குறித்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Location :

Delhi,Delhi,Delhi

First Published :

Feb 03, 2026 12:28 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || திருமலை விவகாரம்; தேரர்களின் ரிட் மனு தள்ளுபடி

Next Post

பினாங்கில் தைப்பூசத்தின் போது எட்டு புகார்களை பெற்றதாகவும் இரண்டு பேர் கைது | Makkal Osai

Next Post
பினாங்கில் தைப்பூசத்தின் போது எட்டு புகார்களை பெற்றதாகவும் இரண்டு பேர் கைது | Makkal Osai

பினாங்கில் தைப்பூசத்தின் போது எட்டு புகார்களை பெற்றதாகவும் இரண்டு பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin