Last Updated:
துரதிர்ஷ்டவசமாக ஷிகர் தவானுக்காக அவரை வர்த்தகம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது.
அபிஷேக் சர்மாவை டெல்லி அணியில் தக்க வைப்பதற்கு கடுமையாக போராடியதாக அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக ஆரம்பம் முதலே சிக்சரும், பவுண்டரியும் அடிக்கும் வீரராக அபிஷேக் சர்மா மாறியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.
கடந்த போட்டிகளில் அபிஷேக் சர்மாவும் மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டும் இணைந்து அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி பலமுறை அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர். அபிஷேக் சர்மா போன்ற வீரர் தங்களுக்கு தேவை என்பதை ஒவ்வொரு ஐபிஎல் அணி நிர்வாகங்களும் உணர்ந்துள்ளன.
இன்றைக்கு இந்திய அணியின் முக்கிய நட்சத்திரமாக அபிஷேக் சர்மா உருவெடுத்துள்ள நிலையில் அவர் தனது முதல் ஐபிஎல் போட்டியை டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார். இந்த நிலையில் அபிஷேக் சர்மா குறித்து டெல்லி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் கூறியதாவது-
அபிஷேக் சர்மாவை அணியிலேயே வைத்திருக்க வேண்டும் என்று டெல்லி நிர்வாகத்திடம் நான் போராடினேன்; சொல்லப்போனால் கெஞ்சினேன் என்றே சொல்லலாம்.
அவரிடம் இருந்த அபாரமான திறமையை நான் ஆரம்பத்திலேயே பார்த்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஷிகர் தவானுக்காக அவரை வர்த்தகம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது.
Feb 03, 2026 10:33 PM IST


