Last Updated:
இந்தியா உடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா கிராமப்புற விவசாயிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் என ப்ரூக் ரோலின்ஸ் தெரிவித்தார். Trump வரிவிலக்கு அறிவித்தார்.
இந்தியா உடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவின் கிராமப்புற பகுதிகளில் விவசாயிகளிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று அந்நாட்டு வேளாண் துறை அமைச்சர் ப்ரூக் ரோலின்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் வரி விதிக்கப்படாது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால், அமெரிக்கா வேளாண் பொருட்கள் மிகக்குறைந்த விலையில் இந்தியாவிற்குள் நுழையும் என்பதால், உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா உடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தால், அமெரிக்காவின் கிராமப்புற பகுதிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று அந்நாட்டு வேளாண் துறை அமைச்சர் ப்ரூக் ரோலின்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு, இந்தியாவுடனான அமெரிக்காவின் வேளாண் வர்த்தகப் பற்றாக்குறை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 11 லட்சம் கோடியாக இருந்தது என ரோலின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி அமெரிக்காவின் வேளாண் விளை பொருட்களுக்கு முக்கிய சந்தை என்றும் கூறியுள்ள ரோலின்ஸ், இந்தப் புதிய ஒப்பந்தம் மூலம், வேளாண் வர்த்தகப் பற்றாக்குறை வெகுவாக குறையும் என தெரிவித்துள்ளார். இது அமெரிக்க விவசாயிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் அந்நாட்டு வேளாண் துறை அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம்: “பணப்புழக்கம் அதிகரிக்கும்..” அமெரிக்க வேளாண் துறை அமைச்சர் ப்ரூக் ரோலின்ஸ்!


