Last Updated:
விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிப்பது அந்த நாட்டின் கிரிக்கெட் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
இந்தியாவுடனான மேட்ச்சை தவிர்த்தால் பேரிழப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷித் லத்தீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ஆம் தேதி இந்தியா, இலங்கை நாடுகளில் தொடங்க உள்ளது. இதனையொட்டி இதில் இடம் பெற்றுள்ள 20 அணிகள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்தியாவில் வந்து கிரிக்கெட் போட்டிகளை விளையாட மறுத்ததால் வங்கதேச கிரிக்கெட் அணியை உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கி ஐசிசி நடவடிக்கை எடுத்தது. முன்னதாக இறுதி முடிவு எடுப்பதற்கு வங்கதேச அணிக்கு கூடதல் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் காலக்கெடு முடிந்த பின்னரும், தனது முடிவில் வங்கதேசம் விடாப்பிடியாக இருந்ததால் உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டது.
போட்டித் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என நேற்று அறிவித்தது.
பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் காரணமாக பாகிஸ்தான் அணி இலங்கையில் தனது அனைத்து போட்டிகளையும் விளையாடுகிறது. அந்த வகையில் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிக இழப்பு ஏற்படும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமிருந்து (ICC) கிடைக்கும் நிதி மற்றும் விளம்பர வருமானங்கள் இதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிப்பது அந்த நாட்டின் கிரிக்கெட் எதிர்காலத்தைப் பாதிக்கும். இது மற்ற நாடுகளுடனான விளையாட்டு உறவுகளிலும் சிக்கலை ஏற்படுத்தும் அவர் கூறியுள்ளார்.


