Last Updated:
பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா அமெரிக்கா அணியை எதிர்கொள்கிறது.
காயம் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் திலக் வர்மா, ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடுவார் என்பதால் இந்திய அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி தனது அசுர பலத்தை நிரூபித்தது. இதையடுத்து, 20 அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்திய அணி சூப்பர் ஃபார்மில் இருப்பதால் உலக கோப்பையை நிச்சயம் வென்று விடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இதற்கிடையே இந்திய அணியில் மிடில் ஆர்டரில் கலக்கி வரும் அதிரடி பேட்ஸ்மேனான திலக் வர்மாவுக்கு கடந்த மாதம் அடி வயிற்று பகுதியில் திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டார்.
அதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை. தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் பிட்னஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனால் அவர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் முழுமையாக பங்கேற்பார் என்பதால் இந்திய அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். உலக தரவரிசையில் மூன்றாவது பேட்ஸ்மேனாக திலக் வருமா தற்போது இருந்து வருகிறார்.


