காங்கோ (DRC):
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ரூபாயா (Rubaya) சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி 28 (புதன்கிழமை) அன்று பெய்த கனமழை காரணமாக சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. சரிவின் போது சுரங்கத்திற்குள் இருந்த ஊழியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 200-க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்து மாண்டனர். சுமார் 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது காங்கோவில் மழைக்காலம் என்பதால், சுரங்கப் பாதைகள் பலவீனமடைந்து மண்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ரூபாயா சுரங்கம், AFC/M23 என்ற கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் 2024-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இக்குழுவின் பேச்சாளர் இந்த விபத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் உயிரிழப்புகள் அரசு அறிவித்ததை விட அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உலகிற்குத் தேவையான மொத்த ‘கோல்டன்’ கனிமத்தில் 15 விழுக்காடு இந்த ஒரே சுரங்கத்திலிருந்து கிடைக்கிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பதற்கு இந்த கனிமம் மிக அத்தியாவசியமானது.
பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கனிமங்களை உற்பத்தி செய்யும் இந்தச் சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு, ஒரு நாளைக்கு வெறும் ஒரு சில டாலர்கள் மட்டுமே கூலியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
The post காங்கோவில் பயங்கரம்: சுரங்கம் சரிந்து 200-க்கும் மேற்பட்டோர் பலி – கிளர்ச்சியாளர்கள் பிடியில் நடந்த விபத்து! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

