Last Updated:
வரி குறைப்பின் காரணமாக ஏற்றுமதி அதிகரிக்கும் போது, இந்தியாவில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 25 சதவீத வரிகள் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் டொனால்டு ட்ரம்ப் இடையே தொலைபேசியில் நடந்த உரையாடலை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. வரி குறைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கடுமையான வர்த்தகப் போர் நிலவி வந்தது. உக்ரைன் போரின் போது இந்தியா ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கியது அமெரிக்காவை அதிருப்தி அடையச் செய்தது.
இதற்குத் பதிலடியாக, இந்தியப் பொருட்கள் மீது 25% முதல் 50% வரை கூடுதல் வரிகளை அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விதித்திருந்தது.
இதன் காரணமாக ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தோல் பொருட்கள், மற்றும் ரசாயனங்கள் ஆகிய துறைகள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. இந்த நிலையில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த உரையாடலின் முடிவில் அமெரிக்கா இந்தியாவுக்கு விதித்திருந்த வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்துள்ளது. அதற்கான அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
Feb 02, 2026 11:23 PM IST
இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த வரி 25-லிருந்து 18% ஆக குறைப்பு.. அறிவிப்பை வெளியிட்டார் டொனால்டு ட்ரம்ப்


