முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (02)அன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) உத்தரவிட்டது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக அவரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது

