
வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக பணியாற்றிய லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்டதையத்து, அந்த பதவி வெற்றிடத்திற்காக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண இன்று திங்கட்கிழமை (02) நடைபெற்ற வாக்கெடுப்பின் போது தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இதன்படி, ஒரு மேலதிக வாக்கினால் வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
வெலிகம பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய லசந்த விக்ரமசேகர கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பிரதேச சபையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ அறையில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்பதவி வெற்றிடமாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

