Last Updated:
மத்திய பட்ஜெட்டில் tremelimumab உள்ளிட்ட புற்று மருந்துகள் விலை குறைவு, Omega Speedmaster Moonwatch, Sony PlayStation PS-5 விலை உயர்வு, MacBook Pro 14, தங்கம் வரி சலுகை அறிவிப்பு.
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிச்சலுகையால், புற்று நோய்களுக்கான மருந்துகள் விலை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் குறைய உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் புற்று நோய்களுக்கான 17 வகையான மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது 27 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் ட்ரெமெலிமுமாப் (tremelimumab ) எனப்படும் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் 20 டோஸ்கள் கொண்ட 15 மில்லிலிட்டர் மருந்து விலை இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை குறைய உள்ளது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பொருட்களுக்கான சுங்க வரி 10 விழுக்காட்டில் இருந்து 11 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஒமேகா ஸ்பீடு மாஸ்டர் மூன்வாட்ச் குரோனோ என்ற கை கடிகாரத்தின் விலை 8 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து 8 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 50,000 ரூபாய்க்கு விற்பனையாகும் சோனி பிளேஸ்டேசன் பிஎஸ்-5-யின் விலை 3,000 ரூபாய் வரை உயரும் என்று கூறப்படுகிறது.
அதேநேரம் தனிநபர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பும்போது சொந்த பயன்பாட்டிற்கு வாங்கி வரும் மடிக்கணினிகளுக்கு சுங்க வரி நீக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மேக்புக் புரோ 14 மடிக்கணினியை வாங்கி வருபவர்கள் 45,000 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
ஓர் ஆண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருக்கும் இந்திய பெண்மணி தாயகம் திரும்பும்போது, 40 கிராம் வரை தங்கம் கொண்டு வந்தால் இறக்குமதி வரி விதிக்கப்படாது என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டிலிருந்து 40 கிராம் தங்க நகையை வாங்கி வருபவருக்கு 35,000 ரூபாய் வரை மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.


