Last Updated:
மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். அது என்னென்ன?.
தமிழ்நாட்டில் அரிய வகை கனிம வழித்தட திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதன்படி, அரிய வகை கனிம உற்பத்திக்காக 7 ஆயிரத்து 280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிய வகை கனிமங்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இதற்காக தாது வளம் மிக்க ஒடிசா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அரிய வகை கனிம வழித்தடம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னை – பெங்களூரு, சென்னை – ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களில் அதிவேக ரயில் வழித்தடத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உள்ள தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரியில் பறவைகள் காட்சி மையம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Union Budget | ஆதிச்சநல்லூர் முதல் பொதிகை வரை.. பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன?


