• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Union Budget | “தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை” – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 1, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Union Budget | “தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை” – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 01, 2026 12:27 PM IST

நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியிட்டார் விபத்து காப்பீட்டுக்கு வரிவிலக்கு வழங்கப்படும்.

News18
News18

மத்திய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2017-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை என்றபோதும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாங்கள் தொலைநோக்குடைய கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். தற்சார்பு நிலையை ஒரு தூணாகக் கொண்டு, பொது முதலீட்டில் வலுவான கவனம் செலுத்தும் அதே வேளையில், நிதி ஒழுங்கு மற்றும் பணவியல் நிலைத்தன்மையைப் பேணி வருகிறோம்.” என்றார்.

பட்ஜெட்டில் வருமான வரி குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, வரும் ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வரும் என்றவர், விபத்து காப்பீட்டுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறினார்.

வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்படும் என்று கூறிய அவர் தனி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம் அளிக்கப்படும் என்றார். திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

வருமானம் குறித்த தவறான தகவல்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார். மருத்துவம், கல்வி செலவுக்கு வரி பிடித்தம் 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் கூறினார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து விற்பனை மீதான வரி குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

கிளவுட் கம்புயூட்டிங் நிறுவனங்களுக்கு 2047 வரை வரி கிடையாது. அதேபோல் டேட்டா மையங்களுக்கு 2047ம் ஆண்டு வரை வரி கிடையாது என்றும் அமைச்சர் அறிவித்தார். எளிமையான வருமான வரி தாக்கல் செய்யும் படிவம் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். புதிய வருமான வரி முறையில் தனி நபர் வருமான வரி விகிதத்தில் எந்தவித மாற்றமில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

Feb 01, 2026 12:14 PM IST

Read More

Previous Post

Union Budget | ரூ. 10,000 கோடி முதலீடு: உலகளாவிய பயோ-பார்மா மையமாக மாறும் இந்தியா! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

திருச்செந்தூர் முருகன் அருளுடன் மலாக்கா பத்து பிரண்டாம் , ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் தைப்பூசம் விழா | Makkal Osai

Next Post
திருச்செந்தூர் முருகன் அருளுடன் மலாக்கா பத்து பிரண்டாம் , ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் தைப்பூசம் விழா | Makkal Osai

திருச்செந்தூர் முருகன் அருளுடன் மலாக்கா பத்து பிரண்டாம் , ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தானத்தில் தைப்பூசம் விழா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin