22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800க்கும், சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று காலையும் மாலையும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களிடையே சற்று ஆறுதலை அளித்துள்ளது. கடைசியாக நேற்று மாலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350 குறைந்து ரூ.15,850க்கும், சவரனுக்கு ரூ.2,800 குறைந்து ரூ.1,26,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.


