Last Updated:
சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி தொடரின் போது அவருக்கு காயம் சற்று அதிகரித்து இருக்கிறது.
காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உலக கோப்பை T20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டன் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ஆம் தேதி இந்தியா, இலங்கை நாடுகளில் தொடங்க உள்ளது. இதனையொட்டி இதில் இடம் பெற்றுள்ள 20 அணிகள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு வந்து விளையாட மாட்டோம் என்று வங்கதேச அணி கூறியதை தொடர்ந்து, அந்த அணி உலக கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு நீண்ட நாட்களாகவே முதுகு வலி பிரச்சனை இருந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி தொடரின் போது அவருக்கு காயம் சற்று அதிகரித்து இருக்கிறது.
இதன் காரணமாக அவரது உடல் நிலையை கவனத்தில் கொண்டு பாட் கம்மின்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பென் துவார்சூயிஸ் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.


