Last Updated:
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் காலத்தில் 52 நாட்கள் உலக நாடுகள் போர்களை நிறுத்த ஐநா சபை மற்றும் ஒலிம்பிக் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள்: உலக நாடுகள் போர்களை 52 நாட்களுக்கு நிறுத்திவைக்க வலியுறுத்ததல்
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து வரும் போர்களை 52 நாட்களுக்கு நிறுத்திவைக்க ஐநா சபை வலியுறுத்தி உள்ளது.
இத்தாலியில் வரும் 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும், மார்ச் 6 முதல் 15ஆம் தேதி வரை பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. இதனையொட்டி ஐநா சபையும், ஒலிம்பிக் நிர்வாக குழுவும் உலக நாடுகளை போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
அதன்படி, ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு முதல், நிறைவடைந்து ஒரு வாரத்துக்குப் பிறகு வரை மொத்தம் 52 நாட்கள் அனைத்து போர்களையும் நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பழங்கால ஒலிம்பிக் விதிமுறைகளின்படி வீரர்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்காக போட்டிகள் நடைபெறும் காலகட்டத்தில் போர்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்படும் நிலையில்
தற்போது போர் நிறுத்தம் சாத்திமானதாக இல்லை என்றாலும், நம்மால் இயலும் போதெல்லாம் அமைதியை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்ற செய்தி உலக மக்களை சென்றடையும் என்பதால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் நடத்தும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Jan 31, 2026 10:42 AM IST


