Last Updated:
மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2000/- பரிசுத்தொகையும், வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படவுள்ள முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா. “இது நம்ம ஆட்டம் 2026” மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துதல் – விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற போட்டிகளில் முதல் பரிசு பெற்ற அணிகள் மற்றும் மாவட்ட அளவில் நேரடியாக நடைபெறக்கூடிய கோலப்போட்டி (பெண்கள்), ஓவியம் (ஆண்கள் மற்றும் பெண்கள்), மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தகவல் தெரிவித்துள்ளார்.
இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்-மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவிலான முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அளவில்: 31.01.2026 மற்றும் 01.02.2026 வரை போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2000/- பரிசுத்தொகையும், வழங்கப்பட உள்ளது.
இதில் ஊராட்சி ஒன்றிய அளவில் தடகளம் – 100 மீட்டர் மற்றும் குண்டு எறிதல், கபாடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்களுக்கும்), ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்), துரோபால் (பெண்களுக்கு மட்டும்) ஆகிய போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு முதல் பரிசு பெற்ற அணிகளுக்கும் மற்றும் மாவட்ட அளவில் நேரடியாக நடைபெற உள்ள ஓவியம் (ஆண்கள் மற்றும் பெண்கள்), கோலப் போட்டிகள் (பெண்களுக்கு மட்டும்) மற்றும் உடல்சார் மாற்றுத்திறனாளிகள், அறிவுசார் மாற்றுத்திறனாளிகள், காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும், மற்றும் பார்வை சார் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும் என 4 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்குமான போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
31.01.2026 அன்று வாலிபால் (ஆண்கள்), கபாடி (ஆண்கள்), ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்கள்), கயிறு இழுத்தல் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுப் போட்டிகளும், கேரம் (ஆண்கள் மற்றும் பெண்கள்) 01.02.2026 அன்று வாலிபால் (பெண்கள்), கபாடி (பெண்கள்), எறிபந்து (பெண்கள்), தடகளம் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் மாவட்ட அளவில் நேரடியாக நடைபெற உள்ள ஓவியம் (ஆண்கள் மற்றும் பெண்கள்), கோலப் போட்டிகள் (பெண்களுக்கு மட்டும்) மற்றும் உடல்சார் மாற்றுத்திறனாளிகள், அறிவுசார் மாற்றுத்திறனாளிகள், காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும், மற்றும் பார்வை சார் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும் என 4 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்குமான போட்டிகள் காலை 8.00 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்படவுள்ளன.
போட்டியில் பங்குபெற வரும்பொழுது விளையாட்டு வீரர்கள் தங்களின் ஆதார் அடையாள அட்டை நகலை தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், விழுப்புரம் அவர்களின் கைபேசி 7401703485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை 9025040003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Jan 30, 2026 12:26 PM IST


