• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மொன்டானா தேசிய காவல் படை கள விஜயம்

GenevaTimes by GenevaTimes
January 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மொன்டானா தேசிய காவல் படை கள விஜயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 


டிட்வா சூறாவளியினைத் தொடர்ந்து சுகாதார வசதிகள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்காக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம்(DMC) மற்றும் பிற அரசநிறுவனங்களைச் சேர்ந்த தமது எதிரிணைகளுடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மொன்டானா தேசிய காவல் படையினைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழுவொன்றை இலங்கையிலுள்ள அமெரிக்கத்  தூதரகம் இவ்வாரம் வரவேற்றது.  


பேரனர்த்தத்திற்குப் பின்னரான மீட்சியினை நீண்டகால மீண்டெழும் தன்மை மற்றும் நிறுவன ரீதியிலான திறனுடன் இணைத்து, மனிதாபிமான உதவிகளுக்கான அமெரிக்காவின் பங்காண்மை அடிப்படையிலான அணுகலை இவ்விஜயம் பிதிபலிக்கிறது.


அமெரிக்காவில் இயற்கை பேரனர்த்தங்களுக்கு பதிலளிப்பதில் தமக்கிருக்கும் விரிவான அனுபவத்தைப் பயன்படுத்தி, மீட்புத்திட்டமிடலுக்கு உதவி செய்வதற்காகவும் எதிர்கால அமெரிக்க மனிதாபிமான உதவி முடிவுகளைத் தெரிவிப்பதற்காகவும் கொழும்பு, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மொன்டானா தேசிய காவல் படை கள விஜயங்களை மேற்கொண்டது.


இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தின் பாதுகாப்பு இராஜதந்திர அதிகாரியும், சிரேஷ்ட பாதுகாப்பு அலுவலருமான லெஃப்டினன் கேணல் மெத்திவ்ஹவ்ஸ், “பங்காண்மைகள் மிக முக்கியமானதாக அமையும் களத்தில் அமெரிக்க-இலங்கை பங்காண்மை எவ்வாறுள்ளதென்பதை இவ்விஜயம்காட்டுகிறது.” எனக் குறிப்பிட்டார்.


“இலங்கை எதிரிணைகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும், தமது நாட்டில் இடம்பெற்ற மெய்யான பேரனர்த்தங்களின் போதுமீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனுபவங்களைக் கொண்டமொன்டானா தேசிய காவல்படையினைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களைப்பயன்படுத்துவதன் மூலமும், நாங்கள் தற்போதய மீட்சிக்கு உதவி செய்வதுடன், எதிர்காலத்திற்கான வலுவான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் உதவுகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.


போர்த்திணைக்களத்தின் State Partnership Program (SPP) இன் கீழ் ஒத்துழைப்பினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், மொன்டானா தேசிய காவல் படைக்கும், இலங்கை பாதுகாப்பமைச்சிற்கும் இடையில் ​2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது முன்னெடுக்கப்படுகிறது.


மொன்டானாவில், காட்டுத்தீ மற்றும் வெள்ளம் முதல் கடுமையான குளிர்காலபுயல்கள் வரை இயற்கைப் பேரனர்த்தங்களின் போது மாநிலத்தின் முதன்மை பதிலளிப்பாளராக தேசியகாவல் படை செயற்படுவதனால் இலங்கையின் அனர்த்தமுகாமைத்துவ நிறுவனங்களுடனான அதன் பங்காண்மையானது வலுவான மற்றும் நடைமுறையில் பொருத்தமான ஒன்றாகஅமைகிறது.


“சமூகங்களுக்கு மிகவும் அவசியமாக உதவி தேவைப்படும்போது பொதுமக்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி, எமது மாநிலத்தில் ஏற்படும் இயற்கையனர்த்தங்களுக்குப் பதிலளிப்பதில் மொன்டானா தேசிய காவல் படை ஒரு முக்கிய பங்கினைவகிக்கிறது.” என மொன்டானா தேசிய காவல் படையின் பிரதான நிர்வாக அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல்ட்ரென்ட்கிப்சன் தெரிவித்தார்.“


இலங்கையுடனான இப்பங்காண்மையினை நாங்கள் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை அவ்வனுபவம் வடிவமைக்கிறது. நாங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளவில்லை. நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியபண்புகளில் வேரூன்றிய உறவுகளையும் கட்டியெழுப்புகிறோம். பங்காளர்களாக மட்டுமன்றி, நண்பர்களாகவும் இலங்கையுடன் இணைந்து  நிற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். அதுவே மொன்டானா பாணியாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.


இச்செயற்பணியானது பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், பேரனர்த்தங்களின் போது மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் நீடித்த உறவுகளைபேணி வளர்ப்பதற்காகவும் மொன்டானா தேசிய காவல் படையினை இலங்கையுடன் இணைக்கும் State Partnership Program (SPP)நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக இடம்பெறும்பல வருட காலஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டதாகும்.


மனிதாபிமான உதவி மற்றும் பேரனர்த்தங்களின்போது மீட்புப்பணிகளை மேற்கொள்வதற்கான தயார்நிலை ஆகியவற்றினை மேம்படுத்துவதற்காக அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகள் ஒன்றிணைந்து அருகருகே பணியாற்றியதை ATLAS ANGEL 2024 மற்றும் PACIFIC ANGEL 2025போன்ற சமீபத்திய ஈடுபாடுகள் வெளிப்படுத்தின. டிட்வா சூறாவளியினைத் தொடர்ந்து பதிலளிப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கு இந்த உறவுகள் முக்கியமானவை என்பதை  அவை நிரூபித்தன.


இவ்வொத்துழைப்பினை அனர்த்தமுகாமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர்.


“நிஜ உலக பேரனர்த்தங்களின் போது மேற்கொள்ளப்பட்ட பதிலளிப்பு நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்டமதிப்புமிக்க அனுபவங்களை இப்பங்காண்மை எடுத்து வருகிறது” என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர்நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத்கொடுவேகொட கூறினார்.“


மொன்டானா தேசிய காவல் படை வழங்கிய அறிவு நுட்பமானகருத்துக்களும் தொழிநுட்பநிபுணத்துவமும் எமது மீட்பு முயற்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததுடன், எதிர்கால அவசர நிலைகளை முகாமை செய்வதற்கான எமது தேசியதிறனையும் அவைபலப்படுத்தின. இவ்வொத்துழைப்பானது ஒருமுறையான மதிப்பீட்டைவிட அதிகமானதாகும்; இது எமது நாடுகளுக்கிடையில் காணப்படும் நீடித்த பங்காண்மைக்கான ஒருசான்றாகும்.”எனஅவர்மேலும்கூறினார்.


4 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அமெரிக்க மனிதாபிமான உதவிகள், பேரனர்த்தங்களுக்கான பதிலளிப்பு மற்றும் அவசர விமானப் போக்குவரத்துத் திறன் ஆகியவற்றை பலப்படுத்துவதற்காக U.S. Excess Defense Articles நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பத்து Bell 206 (TH-57)ஹெலிகொப்டர்களை இலங்கைவிமானப்படைக்கு வழங்கியமை, முக்கியமான உதவிகளை விநியோகிப்பதற்காக அமெரிக்கவிமானப்படையின் C-130விமானங்கள் மேற்கொண்ட நிவாரணவான் போக்குவரத்து உதவி உள்ளிட்ட டிட்வாசூறாவளியினைத் தொடர்ந்து வழங்கப்படும் விரிவான அமெரிக்க உதவிகளின் தொடராக மொன்டானா தேசிய காவல்படையின் இவ்விஜயம் அமைகிறது.


இம்முயற்சிகள் அனைத்தும் பங்காண்மை மற்றும் பகிரப்பட்ட திறன்கள் ஊடாக இலங்கையின் மீட்சிக்கும் நீண்டகால மீண்டெழும் தன்மைக்கும் உதவி செய்வதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.


மொன்டானா தேசிய காவல் படையினைப் பற்றி:


மொன்டானாமா நிலத்தின் ஹெலனா நகரில் தனது தலைமை அலுவலகத்தைக்கொண்டுள்ள மொன்டானா தேசிய காவல் படையானது, தமது மாநிலம் மற்றும் தமது நாடு ஆகிய இரண்டிற்கும் சேவையாற்றும், சிறப்பாகப்பயிற்சியளிக்கப்பட்ட இராணுவ மற்றும் விமானப்படை வீரர்களைக்கொண்டதாகும். சமஷ்டி அரசின் செயற்பணிகளுக்கான தயார் நிலையைப்பேணும் அதேவேளை, மொன்டானா மாநிலத்தினுள் நிகழும் இயற்கையனர்த்தங்களுக்கான முதன்மை பதிலளிப்பாளராக, சமூகங்களை பாதுகாப்பதில் இக்காவற்படை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. State PartnershipProgram நிகழ்ச்சித்திட்டத்தினூடாக நிலைபேறான, பரஸ்பர நன்மைபயக்கும் ஒத்துழைப்பினூடாக பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை, மீண்டெழும் தன்மை மற்றும் நிறுவன ரீதியிலான திறன்களை பலப்படுத்துவதற்காக 2021ஆம் ஆண்டு முதல் மொன்டானா தேசிய காவல்படை இலங்கையுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.


 



Read More

Previous Post

டிரம்ப்பை நம்ப முடியாது.. அமெரிக்காவில் உள்ள தங்களின் 1,236 டன் தங்கத்தை திரும்பக் கேட்கும் ஜெர்மனி! | Makkal Osai

Next Post

இது நம்ம ஆட்டம் 2026… ₹6000 ரொக்க பணம் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான அரிய வாய்ப்பு… | Viluppuram News (விழுப்புரம் செய்திகள்)

Next Post
இது நம்ம ஆட்டம் 2026… ₹6000 ரொக்க பணம் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான அரிய வாய்ப்பு… | Viluppuram News (விழுப்புரம் செய்திகள்)

இது நம்ம ஆட்டம் 2026... ₹6000 ரொக்க பணம் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான அரிய வாய்ப்பு... | Viluppuram News (விழுப்புரம் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin