• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பெண் போலீஸ் கமாண்டோ கொலை… தம்பெல்ஸ் மூலம் தாக்கிய காதல் கணவன்… வரதட்சணை கொடுமையால் பறிபோன உயிர்… | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 29, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பெண் போலீஸ் கமாண்டோ கொலை… தம்பெல்ஸ் மூலம் தாக்கிய காதல் கணவன்… வரதட்சணை கொடுமையால் பறிபோன உயிர்… | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பணத்தின் மீது கொண்ட ஆசையால் காதல் மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்ததை அறிந்தும், குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு கொலைபாதகச் செயலில் ஈடுபட்டுள்ளார் கணவர். பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் இளைஞரின் வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வாழ்ந்துவந்த பெண், தனது இன்னுயிரை இழந்துள்ளார். பெண் போலீஸ் அதிகாரியின் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய கணவர் குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை பாயுமா?

டெல்லியை சேர்ந்த தம்பதி அங்குர் – காஜல் சவுத்ரி. இவர்களில் அங்குர் பாதுகாப்புத் துறையில் எழுத்தராக பணியாற்றி வந்தார். காஜல் டெல்லி காவல் துறையில் ஸ்வாட் (SWAT) எனப்படும் சிறப்பு பிரிவில் கமாண்டோவாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும், கடந்த 2023ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. காதல் திருமணத்திற்கு அங்குர் குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், தனது பெற்றோரை சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார் அங்குர்.

திருமணமான 15வது நாளிலேயே மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். கார் வாங்கி வா, நகை வாங்கி வா என மாமியார் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. போலீஸ் கமாண்டோவாக இருந்துகொண்டு பல்வேறு சவால்களை நெஞ்சுறுதியுடன் எதிர்கொண்ட வீரப் பெண்ணுக்கு, வரதட்சணை கொடுமையை சமாளிக்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவர், கணவருடன் மோகன் கார்டன் பகுதியில் தனிக்குடித்தனம் சென்றுள்ளார். அங்கு சென்றதும் காதல் கணவனும் தனது பங்கிற்கு வரதட்சணை கேட்டு அடித்து, உதைத்து துன்புறுத்தியுள்ளார். அத்துடன், மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழலாம் என்று கூறி கடும் அழுத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நான்கு மாத கர்ப்பிணி என்பதை அறிந்திருந்தும், ஈவு இரக்கமின்றி தலையை சுவற்றில் அடித்து அரக்கத்தனமாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த காஜல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்குரை கைது செய்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று காஜல் சவுத்ரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், புதன்கிழமை அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

வரதட்சணை கொடுமையால் காதல் மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், அவரை கணவனே தம்பெல் மூலம் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Previous Post

Tamilmirror Online || நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

Next Post

இந்தியாவின் பட்ஜெட்டை முதன் முதலில் தாக்கல் செய்தவர் யார் தெரியுமா? பிரிட்டிஷ் காலத்தில் நடந்த சுவாரசிய நிகழ்வு… | வணிகச் செய்திகள்

Next Post
இந்தியாவின் பட்ஜெட்டை முதன் முதலில் தாக்கல் செய்தவர் யார் தெரியுமா? பிரிட்டிஷ் காலத்தில் நடந்த சுவாரசிய நிகழ்வு… | வணிகச் செய்திகள்

இந்தியாவின் பட்ஜெட்டை முதன் முதலில் தாக்கல் செய்தவர் யார் தெரியுமா? பிரிட்டிஷ் காலத்தில் நடந்த சுவாரசிய நிகழ்வு... | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin