Last Updated:
ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர்களை அப்டேட் செய்வதற்காக புதிய மற்றும் மிகவும் வசதியான ஒரு சிஸ்டம் ஜனவரி 28, 2026 முதல் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது.
தற்போதைய டிஜிட்டல் இந்தியா காலகட்டத்தில், ஆதார் என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் வங்கிச் சேவைகள், அரசு திட்டங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகளின் முதுகெலும்பாக மாறியுள்ளது.
இந்த நிலையில் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர்களை அப்டேட் செய்வதற்காக புதிய மற்றும் மிகவும் வசதியான ஒரு சிஸ்டம் ஜனவரி 28, 2026 முதல் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. ஆதார் சேவைகளை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை பெரும்பாலான மக்கள் தங்கள் மொபைல் நம்பர்களை அப்டேட் செய்ய ஆதார் பதிவு மையங்களுக்கு (Aadhaar enrollment center) செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலையில் புதிய சிஸ்டமின்கீழ், இந்த நிலை பெருமளவு குறைக்கப்படும். சேவைகளைப் பெறுவதில் எந்தத் தடையும் ஏற்படாமல் ஆதார் அட்டைதாரர்கள் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் தங்கள் மொபைல் நம்பர்களை அப்டேட் செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதே UIDAI-ன் நோக்கமாக உள்ளது.
தற்போதைய காலகட்டத்தில், ஆதார் நம்பருடன் சரியான மற்றும் செயல்பாட்டில் உள்ள மொபைல் நம்பரை இணைத்திருப்பது மிகவும் முக்கியம். அதேபோல் வங்கி பரிவர்த்தனைகள், மானியங்கள், ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை மற்றும் பல அரசு இணையதளங்களில் லாகின் செய்ய ஓடிபி அடிப்படையிலான வெரிஃபிகேஷன் கட்டாயமாகும். இந்த சூழலில் இந்த புதிய சேவையால் ஆதார் அட்டைதாரர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
UIDAI-ன் இந்த முயற்சி, குறிப்பாக மூத்த குடிமக்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும். ஆதார் கார்டில் மொபைல் நம்பரை அப்டேட் செய்யும் செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஆதார் சேவை மையத்திற்கு மீண்டும் மீண்டும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த புதிய சிஸ்டமில் ஆதார் மொபைல் ஆப் முக்கியப் பங்கு வகிக்கும் என்று UIDAI தெரிவித்துள்ளது. இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. ஆதார் தொடர்பான சேவைகளை பாதுகாப்பாகவும், எளிதாகவும் அணுக இந்த ஆப்-ஐ டவுன்லோட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மொபைல் நம்பரை அப்டேட் செய்வதற்கான இந்த புதிய வசதி, குடிமக்களை மையமாகக் கொண்டு சேவைகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற UIDAI-ன் சிந்தனையைப் பிரதிபலிக்கிறது. இது ஆதார் சேவைகளை மேலும் திறமையானதாக மாற்றுவது மட்டுமல்லாமல், நாட்டின் டிஜிட்டல் சூழலை வலுப்படுத்தும்.
மொத்தத்தில் இனி உங்கள் ஆதார் கார்டில் மொபைல் நம்பரை மாற்ற ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. புதிய ‘ஆதார்’ (Aadhaar) மொபைல் ஆப் மூலமாக வீட்டிலிருந்தே இதைச் செய்யலாம் என்பதே இந்த செய்தியின் சாராம்சம் ஆகும்.
ஆதாரில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய இனி சென்டர்களுக்கு செல்ல தேவையில்லை…! புதிய வசதியை அறிமுகம் செய்துள்ள UIDAI…


