திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் இலவச தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல மாநிலங்களில் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவில் தேர்தல் முடிந்துள்ளதால் திருமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர். இதனையொட்டி திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 20 ஆயிரம் பேருக்கு ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்ததுடன் தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வந்தது.
இதனிடையே திருமலையில் உள்ள வைகுண்டம் காம்பளக்சில் உள்ள 31 அறைகள் முழுவதும் பக்தர்களால் நிரம்பியுள்ளது. இதனால் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் நாளை காலை வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
