
இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஒரு பவுண் 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை (29) நிலவரப்படி 24 கரட் ஒரு பவுண் தங்கம் 420,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பவுண் 22 கரட் தங்கம் 384,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 52,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

