கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.
விமான நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அந்த விமானத்தில் அந்நாட்டு அரசியல்வாதியான டையோஜெனெஸ் குயின்டெரோமற்றும் அவரது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இருந்துள்ளனர்.
மீட்புக் குழுவினர் விமானம் விழுந்த இடத்திற்கு மிக விரைவாகச் சென்றபோதிலும், விபத்தில் சிக்கிய எவரும் உயிர் பிழைக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (a)


