Last Updated:
உத்தர பிரதேசம் ஆக்ராவில் வினய், திருமணம் மறுத்த மின்கி சர்மாவை தலையை துண்டித்து கொலை செய்து உடலை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் காதலியை தலையை துண்டித்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசிய சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்தில் 30 வயதான மின்கி சர்மா என்பவர் HR மேனேஜராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் 30 வயதான வினய் என்பவர், அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றி வந்தார். இருவரும் ஒரே நிறுனத்தில், ஒரே துறையில் பணியாற்றியதால் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால், வினயின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் அவரிடம் இருந்து மெல்ல விலகிச் செல்ல மின்கி முயற்சி செய்துள்ளார். ஆனால், தொடர்ந்து டார்ச்சர் செய்த இளைஞர், தன்னை திருமணம் செய்ய அழுத்தம் கொடுத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண், திட்டவட்டமாக திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி மின்கி சர்மா மாயமாகியுள்ளார். இது தொடர்பான புகாரில், போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், அவருடன் பணியாற்றிய வினையை பிடித்து, விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமாகியுள்ளது. சம்பவத்தன்று காதலியை தேடிச் சென்ற இளைஞர், தன்னை உடனே திருமண செய்யுமாறு கூறி தகராறு செய்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த வினய், இளநீர் வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து மின்கி சர்மாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அப்படி இருந்தும் ஆத்திரம் தீராமல் மிருகமாக மாறிய இளைஞர், காதலியின் தலையை துண்டித்துள்ளார். பின்னர், உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து, டேப் மூலம் பார்சல் செய்துள்ளார்.
இதேபோன்று, தலையை ஒரு கருப்பு பையில் வைத்து, கால்வாயில் வீசியதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை மட்டும் மீட்டனர். ஆனால், தலையை கண்டு பிடிக்க முடியாமல் தேடுதல் பணி தொடர்ந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வினயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் செய்ய மறுத்த காதலியை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த இளைஞர், உடலையும், தலையையும் பார்சல் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய சம்பவம் உத்தர பிரதேசத்தையே உலுக்கியுள்ளது.
திருமணத்துக்கு மறுத்த பெண் HR.. அடுத்த நொடி ‘சைக்கோ’வாக மாறிய அக்கவுண்டன்ட்.. வாக்குமூலத்தில் பகீர்!


