• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகாராஷ்டிரா அரசியலில் கிங் மேக்கர்… 6 முறை துணை முதல்வர்… யார் இந்த அஜித்பவார்? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மகாராஷ்டிரா அரசியலில் கிங் மேக்கர்… 6 முறை துணை முதல்வர்… யார் இந்த அஜித்பவார்? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 28, 2026 11:44 AM IST

Ajit Pawar | நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகனான அஜித் பவார், மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக 6 முறை பதவி வகித்தவர் ஆவார்.

அஜித் பவார்
அஜித் பவார்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.

விபத்தில் சிக்கிய விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இன்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

யார் இந்த அஜித் பவார்?

நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகனான அஜித் பவார், ஜூலை 22, 1959 இல் பிறந்தவர். 1982-ல் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், 1991-ல் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், 4 மாதங்களில் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

அதே ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாராமதி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். இதே தொகுதியில் தொடர்ந்து 8 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மாநிலத்தின் நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் அஜித் பவார் இருந்துள்ளார்.

சரத் பவாரின் அரசியல் வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் அஜித் பவார் தனித்து செயல்பட்டார். 2023 ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (NCP) ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு, அவரது பிரிவையே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மகாராஷ்டிரா பா.ஜ.க. கூட்டணி அரசில் 3-வது பெரிய கட்சியாக அஜித் பவாரின் கட்சி உள்ளது.

Location :

Mumbai,Maharashtra

First Published :

Jan 28, 2026 11:22 AM IST

Read More

Previous Post

டித்வாவினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்க கடன் உதவி…! வெளியான அறிவிப்பு

Next Post

Budget 2026 | பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஏன்? இந்த நாள் எப்படி தேர்வு செய்யப்பட்டது? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Budget 2026 | பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஏன்? இந்த நாள் எப்படி தேர்வு செய்யப்பட்டது? | வணிகம் போட்டோகேலரி

Budget 2026 | பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஏன்? இந்த நாள் எப்படி தேர்வு செய்யப்பட்டது? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin