• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

”மோதல்கள் நிறைந்த உலகில் இந்தியா அமைதியை பரப்புகிறது” குடியரசு தலைவர் திரௌபதி முர்மு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 26, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
”மோதல்கள் நிறைந்த உலகில் இந்தியா அமைதியை பரப்புகிறது” குடியரசு தலைவர் திரௌபதி முர்மு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 26, 2026 7:49 AM IST

திரௌபதி முர்மு குடியரசு தின உரையில் ‘வந்தே மாதரம்’ 150வது ஆண்டு, மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ஸ்ரீ அரவிந்தர், தேஜேந்திர குமார் மித்ரா பங்களிப்பு குறித்து பேசினார்.

குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

மோதல்கள் நிறைந்த உலகில் இந்தியா அமைதியை பரப்புவதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகள் நமது அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் 77 ஆவது குடியரசுத் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆகாஷ்வாணியின் தேசிய நெட்வொர்க் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அந்த உரையில், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ ஒவ்வொரு இந்தியருக்குள்ளும் தேசபக்தியைத் தூண்டும் ஒரு தெய்வீகப் பிரார்த்தனை என்று உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் இப்பாடல் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பேசிய குடியரசுத் தலைவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பங்களிப்பைத் தனித்துவமாக எடுத்துரைத்தார். பாரதியார் ‘வந்தே மாதரம் என்போம்’ என்று தமிழில் பாடலை இயற்றி, தேசபக்தி உணர்வை பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்ததாகப் பாராட்டினார்.ஸ்ரீ அரவிந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியான இதன் பதிப்புகள், இந்தியர்களைத் தேச ஒற்றுமை எனும் ஒற்றைப் புள்ளியில் இணைத்ததாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவானது ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டை மையக்கருத்தாகக் கொண்டு அமைகிறது. இதன் ஒரு பகுதியாக, 1923-ஆம் ஆண்டு தேஜேந்திர குமார் மித்ரா வரைந்த ‘வந்தே மாதரம்’ பாடல் வரிகளை விளக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்கள் கடமைப் பாதையில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. அணிவகுப்பின் நிறைவில், ‘வந்தே மாதரம்’ வாசகம் தாங்கிய பிரம்மாண்ட பதாகை மற்றும் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு, தேசத்தின் இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்கப்பட உள்ளத எனத் தெரிவித்துள்ளார்.

#WATCH | President Droupadi Murmu addresses on the eve of Republic Day 2026.


She says, “… India is the world’s fastest-growing major economy. Despite global uncertainties, India is recording continuous economic growth. We are moving towards achieving our goal of becoming… pic.twitter.com/8TngCSj8eL

— ANI (@ANI) January 25, 2026

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய குடியரசுக்கான ஒரு மிகச்சிறந்த அடித்தள ஆவணம் ஆகும். நமது நாட்டின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை ஒருமுறை திரும்பிப் பார்க்க குடியரசு தினம் ஒரு நல்வாய்ப்பை வழங்குகிறது”. நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகள் நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ளன.

அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசியவாத உணர்விற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். 1950 ஆம் ஆண்டு முதல், நாம் நமது அரசியலமைப்பு லட்சியங்களை நோக்கி இந்தியக் குடியரசை வழிநடத்தி வருகிறோம். நமது உலகத் தரம் வாய்ந்த விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளனர். திறமையான கலைஞர்கள், கைவினைஞர்கள், மற்றும் எழுத்தாளர்கள் நமது செழுமையான பாரம்பரியங்களுக்கு நவீன வடிவம் கொடுக்கிறார்கள்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வழிகாட்டி வருகிறார்கள். நமது கடின உழைப்பாளியான சகோதர சகோதரிகள் நாட்டைக் கட்டியெழுப்புகிறார்கள். அதேபோல, நம்பிக்கைக்குரிய இளைஞர்களும் குழந்தைகளும், தங்கள் திறமைகளாலும் பங்களிப்புகளாலும், நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தின் மீதான நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறார்கள் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Read More

Previous Post

Tamilmirror Online || என் புருஷன் கூட ஓடி போவியா: நிர்வாணமாக்கி சாணி பூசிய மனைவி

Next Post

தங்கம் ஒரு கிராம் ரூ.15,000 ஐ கடந்தது.. வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சம்

Next Post
தங்கம் ஒரு கிராம் ரூ.15,000 ஐ கடந்தது.. வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சம்

தங்கம் ஒரு கிராம் ரூ.15,000 ஐ கடந்தது.. வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin