அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தன. இதனால் அந்நாடுகளின் தூதர்களைத் திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஓராண்டாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி காசாவில் உள்ள அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் இதுவரை 35,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீன்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்துள்ளன.
இந்நிலையில் அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மாமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில் இதுவரை 143 நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ளன.
இதனிடையே பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நார்வே, ஸ்பெயின், அயர்லாந்திலிருந்து தூதரக அதிகாரிகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றது. இதனால் ஹமாஸிடம் சிக்கியுள்ள இஸ்ரேலிய பணைய கைதிகளை மீட்பதில் மேலும் சிக்கல் உண்டாகும் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
