இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் அணி மறுத்துவிட்டதால், அந்த அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறவுள்ளன. இதனிடையே, தொடரில் இருந்து வங்கதேசம் நீக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் பங்கேற்குமா என்பதை அரசுதான் முடிவு செய்யும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியிருந்தார். இந்த சூழலில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு, கேப்டன் சல்மான் அலி அகா தலைமையில் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


