Last Updated:
தொடரை இழக்கக்கூடாது என்பதில் நியூசிலாந்து அணியும் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் முக்கிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று சூப்பர் ஃபார்மில் இருக்கிறது. குறிப்பாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சூர்யா குமார் யாதவ், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா உள்ளிட்டோர் தங்களது திறமையை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பம் ஆக உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் என்பதால் அதற்கு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதே நேரம் தொடரை இழக்கக்கூடாது என்பதில் நியூசிலாந்து அணியும் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இடம் பெறுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதே போன்று ரிங்கு சிங்கிற்கு பதிலாக அக்சர் படேல் அணியில் இடம் பெறவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யா குமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு யாதவ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி.


