Last Updated:
நியூ யார்க், நியூ ஜெர்சி மற்றும் கிழக்கு அமெரிக்கா நகரங்களுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனமும் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், நியூயார்க், நியூ ஜெர்சிக்கான விமான சேவைகளை தற்காலிகமாக ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் கடும் பனிப் பொழிவால் சாலையில் தேங்கும் பனிகளை அகற்றும் பணி ஓய்வின்றி தொடர்கிறது. டெக்சாஸ், ஒக்லஹாமா, பிலடெல்பியா, நியூ யார்க், பாஸ்டன் உள்ளிட்ட பெருநகரங்களில் விடாமல் பனி பொழிவதால் ராட்சத வாகனங்கள் மூலம் அதை அகற்றும் பணியில் ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் தயாராக இருப்பதாக நியூ யார்க் மேயர் சோரன் மம்தானி தெரிவித்துள்ளார். பனிப் பொழிவால், அட்லான்டா, போஸ்டன், சிகாகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்கள் முடங்கின. ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. டெல்டா ஏர்லைன்ஸ், etihad, எமிரேட்ஸ், லுப்தான்சா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு வழங்கும் விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்தன.
அமெரிக்காவில் பனிப் புயல்.. அவசர நிலை பிரகடனம்.. விமான சேவைகளை ரத்து செய்த ஏர் இந்தியா நிறுவனம்!


