Last Updated:
மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும், நவீனக் கல்வியை வழங்கவுமே செய்யப்படுவதாகச் சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.
சீனாவில் வசிக்கும் திபெத்திய மாணவர்களைக் குறிவைத்து, அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்வித் திட்டம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் சுமார் 10,500 திபெத்திய மாணவர்கள் சீனாவின் உட்புற நகரங்களில் உள்ள ‘திபெத் வகுப்புகளில்’ சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன அரசின் இந்தத் திட்டத்தின்படி, திபெத் தன்னாட்சிப் பகுதியில் வாழும் சிறு வயதுக் குழந்தைகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் பாரம்பரியச் சூழலில் இருந்து பிரிக்கப்படுகின்றனர். அவர்கள் சீனாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள உறைவிடப் பள்ளிகளுக்கு மாற்றப்படுகின்றனர்.
அங்கு தங்கியிருந்து பயிலும் மாணவர்களுக்குத் திபெத்திய மொழிக்கு மாற்றாகச் சீன மொழியான ‘மாண்டரின்’ கட்டாயமாக்கப்படுகிறது.
இதனால் மாணவர்களுக்குத் தங்களின் தாய்மொழி மற்றும் புத்த மதச் சடங்குகளைப் பயில அனுமதி மறுக்கப்படுகிறது. இதன் மூலம் திபெத்திய அடையாளத்தை முழுமையாக அழிக்கச் சீனா முயல்கிறது என்று புகார்கள் எழுந்துள்ளன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை மாணவர்களிடம் திணிப்பதன் மூலம், அவர்களின் சிந்தனை முறையை மாற்ற சீனா திட்டமிடுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
Jan 24, 2026 10:07 PM IST
திபெத் மாணவர்கள் 10,500 பேரை சீனப் பள்ளிகளில் சேர்த்த சீன அரசு – கலாச்சாரம் அழியும் எனப் புகார்


