சிங்கப்பூர்: தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் உள்ள 7 புதிய நிலையங்களில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
சூரிய மின் உற்பத்தி தகடுகள் என்பது சூரியனிலிருந்து பெறப்படும் ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக்கூடிய ஒரு அமைப்பாகும். இது சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மேலும் சூரிய சக்தியானது வற்றாத மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆகும்.இப்படி பெறப்படும் ஆற்றலை பயன்படுத்துவது சுலபம் மற்றும் மின் கட்டணமும் குறைவு.

