ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.
வெற்றி நடையைத் தொடரும் வேட்கையுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது. அந்த அணி லீக் சுற்றில், ஒரு கட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. பின்னர் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி கடைசி 5 போட்டிகளில் நான்கில் தோல்வியை தழுவியது. அதுவும் கடைசி லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு, வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் ராஜஸ்தான் களம் காணும் என்பதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேற நேரிடும். வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இரண்டாவது அணியை தீர்மானிக்கும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் உடன் நாளை மறுதினம் பலப்பரீட்சை நடத்தும்.
ஜோஸ் பட்லர் அணியில் இல்லாத சூழலில் ராஜஸ்தானின் பேட்ஸ்மேன்கள் கடந்த சில போட்டிகளாக திணறி வருகின்றனர். இதேபோன்று பவுலிங்கும் எதிரணிக்கு சவால் கொடுக்கும் வகையில் இல்லை.
பெங்களூரு அணியில் கோலி, டூப்ளசிஸ், ரஜத் பட்டிதார் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். பவுலங்கில் ஆர்சிபி போட்டி கொடுத்தால் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
பெங்களூரு அணி கடந்த 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று எழுச்சியுடன் காணப்படும் நிலையில், தொடர் தோல்விகளால் ராஜஸ்தான் தள்ளாடுகிறது. இன்றைய ஆட்டம் வாழ்வா, சாவா என்பதுபோல் இருக்கும் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க – ஐபிஎல் இறுதி போட்டிக்கு 4 ஆவது முறையாக முன்னேறிய கேகேஆர்
லீக் சுற்றில் நடந்த சென்னை – பெங்களூரு போட்டியை போன்று இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கலாம்.
ராஜஸ்தான் உத்தேச அணி – யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
பெங்களூரு உத்தேச அணி – விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், ஸ்வப்னில் சிங், கர்ண் ஷர்மா, லாக்கி பெர்குசன், யாஷ் தயாள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
