Last Updated:
பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுராந்தாகத்தில் இன்று நடைபெற உள்ள பொதுக்குழு பிரதமர் மோடி கலந்து கொள்ள நிலையில் தமிழ்நாடு என்டிஏ உடன் இருக்கிறது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் வெள்ளியன்று பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மாலை 3 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், மேடையில் வைக்கப்பட்ட பேனரில் மாம்பழம் சின்னம் இடம்பெற்றிருப்பதும், தலைவர்களின் படங்கள் வரிசையில் பிரேமலதா, ஓபிஎஸ் படங்கள் இடம்பெறாததும் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், மாநாட்டிற்காக ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட உள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 7 அடுக்கு பாதுகாப்புடன், 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு என்.டி.ஏ-வுடன் இருக்கிறது! இன்று பிற்பகல் மதுராந்தகத்தில் நடைபெறும் பேரணியில் என்.டி.ஏ தலைவர்களுடன் நானும் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் நிறைந்த தி.மு.க ஆட்சிக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு மக்கள் முடிவு செய்துவிட்டனர். என்.டி.ஏ-வின் நல்லாட்சி சாதனைப் பதிவும், பிராந்திய மக்களின் விருப்பங்களுக்கு அது அளிக்கும் முக்கியத்துவமும் மாநில மக்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் வாகனங்கள், வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், மரக்காணம் வழியாக ஜிஎஸ்டி சாலையை அடையலாம் என்றும், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள், உளுந்தூர்பேட்டை, மடப்பட்டு வழியாக வந்தவாசி, காஞ்சிபுரம் கீழம்பி புறவழிச்சாலை வழியாக பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jan 23, 2026 10:18 AM IST


