இமயமலையின் பனி மூடிய சிகரங்கள் முதல், அமைதியான குமரிக்கடல் வரை இந்தியா அதன் கலாச்சாரங்கள், பண்பாடு மற்றும் தனித்துவத்துக்காக பிரபலமாக அறியப்படுகிறது. அதற்கு இணையாக, இந்தியாவின் விமான நிலையங்களும் வெறும் பயணம் செய்யும் இடங்களாக மட்டுமல்லாமல் நவீன கட்டிடக்கலை, பாரம்பரிய கலை, இயற்கை அழகு போன்றவற்றை ஒருங்கிணைத்து, பயணிகளுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தை வழங்குகின்றன.


