• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காசா மோதலில் இந்தியர் பலி: ஐ.நா பணியில் இணைந்த 6 வாரங்களில் நிகழ்ந்த சோகம் | Here are some facts about Colonel Waibhav Anil Kale who died in gaza

GenevaTimes by GenevaTimes
May 23, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
காசா மோதலில் இந்தியர் பலி: ஐ.நா பணியில் இணைந்த 6 வாரங்களில் நிகழ்ந்த சோகம் | Here are some facts about Colonel Waibhav Anil Kale who died in gaza
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காசா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநா-வில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அவர் பெயர் வைபவ் அனில் காலே.

காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதன் அடுத்தகட்டமாக காசாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்தது.

ரஃபா மீது இஸ்ரேல் முதற்கட்ட தாக்குதலைத் தொடங்கிவிட்டது, இதற்கிடையே ஐநா பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் பயணித்த வாகனம் ரஃபாவில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. உயிரிழந்த அந்த நபரின் பெயர் வைபவ் அனில் காலே. இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். 46 வயதாகும் அவர், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

அவரது குடும்பமே, ராணுவ குடும்பம். அவரது சகோதரர், உறவினர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தில் தான் பணியாற்றுகின்றனர். நாக்பூரைச் சேர்ந்த இவர், 1998-ல் ராணுவத்தில் இணைந்து பல்வேறு பிரிவுகளில், காஷ்மீர், சியாச்சின் போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரிந்துள்ளார்.

இந்திய ராணுவத்தில் பட்டாலியன் கமாண்டர், ரைபிள் கம்பெனி கமாண்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த அவர், 2022-ல் தனது பணியில் இருந்து ஓய்வுபெற்றார். ராணுவத்தில் இருந்தபோது, கர்னல் வைபவ் 2009 – 2010 வரை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார். 5-6 வாரங்களுக்கு முன்புதான் ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு சேவை ஒருங்கிணைப்பு அதிகாரியாக இணைந்த நிலையில், தற்போது காசா மீதான தாக்குதலில் சிக்கி உயிரை இழந்துள்ளார்.



Read More

Previous Post

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து: கேரளாவில் விமானக் கட்டணம் அதிகரிப்பு | after Air India Express flights cancelled Air fare hike in Kerala

Next Post

தஞ்சோங் பங்காவில் உள்ள ஹோட்டல் பால்கனியில் இருந்து விழுந்து 24 வயது பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார். | Makkal Osai

Next Post
தஞ்சோங் பங்காவில் உள்ள ஹோட்டல் பால்கனியில் இருந்து விழுந்து 24 வயது பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார். | Makkal Osai

தஞ்சோங் பங்காவில் உள்ள ஹோட்டல் பால்கனியில் இருந்து விழுந்து 24 வயது பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார். | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin