• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

400 கோடி மக்களின் மொத்த சொத்தைவிட அதிக சொத்து… இந்த 12 பேரிடம் இருக்கிறது! யார் இவர்கள்? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
January 21, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
400 கோடி மக்களின் மொத்த சொத்தைவிட அதிக சொத்து… இந்த 12 பேரிடம் இருக்கிறது! யார் இவர்கள்? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 21, 2026 2:02 PM IST

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி, உலக ஜனநாயகத்திற்கு “மிகவும் ஆபத்தானது” என்று ஆக்ஸ்பாம் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

News18
News18

உலகின் டாப் 12 கோடீஸ்வரர்களிடம் உள்ள சொத்து மதிப்பு, 400 கோடி மக்களின் மொத்த சொத்தை விட அதிகமாக உள்ளதாக ஆக்ஸ்பாம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக பில்லியனர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றத்தையொட்டி ஆக்ஸ்பாம் இன்டர்நேஷ்னல், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் டாப் 12 கோடீஸ்வரர்களிடம் உள்ள சொத்து மதிப்பு, 400 கோடி மக்களின் மொத்த சொத்தை விட அதிகம் என கூறப்பட்டுள்ளது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், அமெசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ், செர்ஜி பிரின், ஓரக்களின் லாரி எலிசன், மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட மொத்தம் 12 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டு, 1,665 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது உலக வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிய உச்சமாகும்.

உலக மகா கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு, வரலாற்றில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. அவரின் சொத்து மதிப்பு 62 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாட்டுத் தளர்வுகள் மற்றும் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு போன்ற கொள்கைகள், இந்த அதீத சொத்து உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு நிமிடமும் சுமார் 25 கோடி ரூபாய் என்ற கணக்கில் உயர்ந்து வருகிறது. ஒரு சாமானிய மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் ஈட்ட முடியாத தொகையை, இவர்கள் ஒரு நிமிடத்தில் ஈட்டுகிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை என ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.

மேலும், வரலாற்றில் முதல்முறையாக பில்லியனர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. பில்லியனர்களின் சொத்து மதிப்பு 2025-ஆம் ஆண்டில் மட்டும் 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளின் சராசரி வளர்ச்சியை விட 3 மடங்கு அதிகம். 2020-ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால், இவர்களின் சொத்து 81 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை தற்போது 200-க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் உள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ₹91 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள மிகவும் ஏழ்மையான 50% மக்களிடம் இருக்கும் மொத்த சொத்தை விட, இந்தியாவின் முதல் 10 பில்லியனர்களிடம் இருக்கும் சொத்து மதிப்பு அதிகம் என்று ஆக்ஸ்பாம் கணக்கிட்டுள்ளது. ஒருபுறம் பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உலகில் நான்கில் ஒருவர் போதிய உணவின்றிப் பசியால் வாடுவதாக அறிக்கை கூறுகிறது. எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட டாப் 12 கோடீஸ்வரர்களுக்கு வெறும் 5% வரி விதித்தாலே, உலகில் நிலவும் வறுமையை ஒழிக்க முடியும் என்றும் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை வழங்க முடியும் என்றும் ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி, உலக ஜனநாயகத்திற்கு “மிகவும் ஆபத்தானது” என்று ஆக்ஸ்பாம் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.

Read More

Previous Post

ஜனவரி 27 கடைசி நாள்.. ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகளுக்கு பிசிசிஐ கெடு | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

மலேசியாவின் AI எதிர்காலத்தை மேம்படுத்த மாநிலங்களையும் தொழில்துறையையும் ஒன்றிணைக்கும் MDX மாநில தலைமைத்துவ உச்சநிலை மாநாடு 2026 | Makkal Osai

Next Post
மலேசியாவின் AI எதிர்காலத்தை மேம்படுத்த மாநிலங்களையும் தொழில்துறையையும் ஒன்றிணைக்கும் MDX மாநில தலைமைத்துவ உச்சநிலை மாநாடு 2026 | Makkal Osai

மலேசியாவின் AI எதிர்காலத்தை மேம்படுத்த மாநிலங்களையும் தொழில்துறையையும் ஒன்றிணைக்கும் MDX மாநில தலைமைத்துவ உச்சநிலை மாநாடு 2026 | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin