Last Updated:
Today Tamil News Headlines | இன்றைய நாளுக்கான (ஜனவரி 21) தலைப்பு செய்திகளை தற்போது பார்க்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை இன்றைய நாளில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை தற்போது சுருக்கமாக பார்க்கலாம்.
- வெளியேறிய 4 மாதங்களில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த டிடிவி.தினகரன். சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனித்தனியே இணைந்த கட்சிகள். ஈபிஎஸ்-ஐ சந்தித்து அன்புமணி இணைந்த நிலையில் பியூஷ் கோயலை சந்தித்து சேர்ந்த டிடிவி.தினகரன்.
- தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறந்து கட்சி மற்றும் தமிழ்நாட்டின் நலனுக்காக அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ளேன் – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம்.
- ஜெயலலிதாவின் நல்லாட்சியை மீண்டும் கொண்டுவருவோம். தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நம்பிக்கை.
- என்.டி.ஏ.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு ஈபிஎஸ் பெயரை கூறாமல் தவிர்த்த டிடிவி தினகரன். அனைவருக்கும் தெரியும் என மழுப்பல்.
- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து. ஜெயலலிதா ஆட்சி அமைய அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றுவோம் என நன்றி கூறிய டிடிவி தினகரன்.
- தேசிய ஜனநாயக கூட்டணி நாளுக்கு நாள் வலிமையாவதால் வெற்றி நிச்சயம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேதிரன் எக்ஸ் பதிவு. கூட்டணியில் இணைந்ததற்காக டிடிவி தினகரனுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் தலைவர் அண்ணாமலை.
- என்னென்னவெல்லாம் பேசிய டிடிவி தினகரன் திரிசூலத்தின் மகிமையால் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாக தி.க. தலைவர் கி.வீரமணி விமர்சனம். வழக்கு இருப்பவர்களை எல்லாம் மிரட்டி கூட்டணியில் சேர்ப்பதாகவும் குற்றச்சாட்டு.
- தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தங்களை யாரும் அழைக்கவில்லை என பிரேமலதா பேட்டி. பியூஷ் கோயல் எதற்காக சென்னை வந்தார் என்பதே எனக்கு தெரியாது எனவும் பதில்.
- சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்த ஓ.பன்னீர்செல்வம். கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்றார். தாங்கள் அரசியல் கட்சி நடத்தவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி. ஓபிஎஸ் சரியான முடிவு எடுக்காததால் விலகியதாக வைத்திலிங்கம் கூறியது குறித்த கேள்விக்கு பதில்.
- அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது துரதிருஷ்டவசமானது என சசிகலா அறிக்கை. தனனைத்தானே தலைவர் என அறிவித்துக் கொண்டவர்களின் தோல்வியை இது காட்டுவதாக ஈபிஎஸ் குறித்து மறைமுக விமர்சனம்.
- பேருந்தில் பாலியல் தொல்லை என பொய்யாக வெளியிட்ட வீடியோவால் இளைஞர் உயிரிழந்த வழக்கு. கேரளாவைச் சேர்ந்த பெண் யூடியூபரை கைது செய்து விசாரிக்கும் காவல்துறை.
- சென்னையில் ஒரே நாளில் 515 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 415 ரூபாய்க்கு விற்பனை. சவரனுக்கு 4 ஆயிரத்து 120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 320 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி. ஒரே நாளில் 31 காசுகள் குறைந்து 91 ரூபாய் 28 காசுகளானது.
- நாசாவில் இருந்து ஓய்வு பெற்றார் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுனிதா வில்லியம்ஸ். 27 வருட பணியில் 608 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.
- திரௌபதி- 2 பட வெளியீட்டிற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு.. வரலாற்றை மாற்றி படம் எடுத்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு.
- பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 26இல் தொடக்கம். பிப்ரவரி ஒன்றாம் தேதி தைப்பூசத் தேரோட்டம்.
- ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையில் கோலியை பின்னுக்குத் தள்ளிய டேரில் மிச்செல். இந்தியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்தார்.
- கோடியக்கரை மீனவர்கள் 7 பேரை கைது செய்த இலங்கை கடற்படை. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்துச் சென்றது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம். அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் சேர்ந்து பணிகளை ஆய்வு செய்த தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல்.
- சட்டமன்ற தேர்தல் குறித்து வரும் 25ஆம் தேதி பனையூரில் தவெக தலைவர் விஜய் ஆலோசனை. மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
- போராட்டத்தை தற்காலிமாக ஒத்திவைத்த சத்துணவு ஊழியர்கள். அரசின் மீதுள்ள நல்லெண்ண அடிப்படையிலும், மாணவர்களின் நலன் கருதியும் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவிப்பு


