Last Updated:
இரண்டு நாள் இடைவெளியில் ஸ்பெயின் நாட்டில் இரண்டு ரயில் விபத்துகள் ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினில் இரண்டு நாள் இடைவெளியில் இரண்டு ரயில் விபத்துகள் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் மேட்ரிட் அடுத்த கோர்டோபா நகரில் கடந்த திங்கட்கிழமை இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். லகாவில் இருந்து மேட்ரிட் நோக்கிச் சென்ற அதிவேக ரயில் தடம் புரண்டு, பக்கத்து தண்டவாளத்தில் சென்ற ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், நாட்டையே உலுக்கிய சம்பவத்தின் அதிர்வலை அடங்குவதற்குள் பார்சிலோனாவில் மீண்டும் ஒரு ரயில் விபத்து நிகழ்ந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தண்டவாளத்தின் அருகே உள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த நிலையில், அதன் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 5க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் விபத்து குறித்து அந்நாட்டு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.


