Last Updated:
கோழிக்கோடு வடகரா பகுதியில், Deepak தற்கொலைக்கு தூண்டியதாக இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியிட்ட பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவை உலுக்கிய வீடியோவின் எதிரொலியாக அதனை பதிவிட்ட இளம்பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியில், 35 வயதான பெண் வழக்கறிஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில், பேருந்து பயணத்தின்போது நடுத்தர வயது நபர் ஒருவர் தவறான நோக்கத்தில் தன்னை தொட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதனைத்தொடர்ந்து தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த அந்த நபர், தன்னை பற்றிய சமூகவலைதளப் பதிவை கண்ட அதிர்ச்சியில் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, சமூகவலைதளங்களில் தான் பிரபலமாக வேண்டும், அது வைரலாக வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே இளம் பெண் செயல்பட்டதாக சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதனிடையே, மரணமடைந்த நபர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் ஒரு வாரத்திற்குள் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அம்மாநில மனித உரிமை ஆணையம் உத்தரிவிட்டிருந்தது.
இந்நிலையில், கேரளா பேருந்து பயணத்தில் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தீபக் என்பவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தில், அந்த வீடியோவை வெளியிட்ட இளம்பெண் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தீபக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரில், வடகரை பகுதியில் பதுங்கியிருந்தவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.


