Last Updated:
டிரம்ப்பை மறைமுகமாக குற்றஞ்சாட்டிய ஏ.பி.சிங், ராணுவ வலிமை மற்றும் துணிச்சல் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியம் என 22வது சுப்ரதோ முகர்ஜி கருத்தரங்கில் வலியுறுத்தினார்.
வலிமையான ராணுவம் இல்லையென்றால், வெனிசுலா மற்றும் ஈராக் நாடுகள் போன்று நம்மை யார் வேண்டுமானாலும் அடிபணிய வைக்க முடியும் என்று டிரம்ப்பை மறைமுகமாக குற்றஞ்சாட்டி இந்திய விமானப் படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் வெனிசுலா, ஈரான், கிரீன்லாந்து ஆகிய நாடுகளை அடிபணிய வைக்க பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் இந்த நாடுகளை அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் ஒருபுறம் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பல்வேறு வரி கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறார்.
இந்நிலையில், வலிமையான ராணுவம் இல்லையென்றால், வெனிசுலா மற்றும் ஈராக் நாடுகள் போன்று நம்மை யார் வேண்டுமானாலும் அடிபணிய வைக்க முடியும் என்று டிரம்ப்பை மறைமுகமாக குற்றஞ்சாட்டி இந்திய விமானப் படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற 22 வது சுப்ரதோ முகர்ஜி கருத்தரங்கில் உரையாற்றிய இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், ஒரு நாட்டின் வலிமையை தீர்மானிக்கும் இறுதி சக்தியாக ராணுவ பலம் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
#WATCH | Delhi | At the 22nd Subroto Mukherjee Seminar, Chief of Air Staff, Air Chief Marshal AP Singh says, “… We must understand that military power stands as the ultimate arbiter of national power… Any one of these powers is very important but finally, what is required is… pic.twitter.com/Nv6euh7RmL
— ANI (@ANI) January 21, 2026
மேலும் ராணுவ வலிமை மட்டும் போதாது என்றும் அதைச் சரியான நேரத்தில் பயன்படுத்தும் துணிச்சல் மிக முக்கியம் என்றும் அவர் கூறினார். அதேபோல், கடந்த கால பெருமைகளை மட்டும் பேசி கொண்டிருக்காமல் எதிர்கால சவால்களுக்குத் தயாராக வேண்டும் என்றும் ராணுவ வீரர்களுக்கு ஏ.பி.சிங் அழைப்பு விடுத்தார்.
“வலிமையான ராணுவம் இல்லையென்றால்..” டிரம்ப்பை மறைமுகமாக குற்றஞ்சாட்டிய இந்திய விமானப் படை தளபதி!


