Last Updated:
இந்த மேட்ச்சை ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மூலமாக நேரலையில் கண்டு ரசிக்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் இந்த மேட்ச்சை நேரலையாக வழங்குகின்றன.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி இன்று தொடங்குகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்த நிலையில், 20 ஓவர் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது. இந்தியா- நியூசிலாந்து இடையேயான 20 ஓவர் தொடர் இன்று தொடங்கும் நிலையில், மூன்றாவது வீரராக இஷான் கிஷன் களமிறங்குவார் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 5 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதன் ஒரு நாள் தொடரில் 2-க்கு ஒன்று என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து, 20 ஓவர் தொடர் இன்று தொடங்குகிறது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு முதல் போட்டி தொடங்க உள்ளது.
போட்டிகள் ஆப் மற்றும் டிவியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த மேட்ச்சை ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மூலமாக நேரலையில் கண்டு ரசிக்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்கள் இந்த மேட்ச்சை நேரலையாக வழங்குகின்றன.
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், ஷிவம் துபே, வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


