கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (IPS) நடத்திய புதிய ஆய்வில், சுமார் 1.83 மில்லியன் இலங்கை தொழிலாளர்கள், ( வேலை செய்யும் மக்கள் தொகையில் தோராயமாக 22.8 சதவீதம் ) செயற்கை நுண்ணறிவுக்கு (GenAI) உள்ளாகக்கூடிய தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பில் AI , ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்களுக்கு அச்சுறுத்தலாக தற்போது AI மாறியுள்ளமை குறித்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

