PMEGP இல் விண்ணப்பிக்க தடைப்படும் தொழில்கள்:மத்திய அல்லது மாநில அரசின் மானியத்துடன் கூடிய ஏதேனும் திட்டத்தில் கடன் பெற்றவர்கள் PMEGP இல் விண்ணப்பிக்க முடியாது; மேலும் வாங்கி–விற்கும் வியாபாரங்கள் (பல சரக்கு கடை, மளிகை கடை, பொருட்களை வாங்கி விற்கும் தொழில்), படித்து கொண்டிருப்பவர்கள், தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்புவோர், இறைச்சி சம்பந்தப்பட்ட தொழில்கள், போதை பொருட்கள் சார்ந்த தொழில்கள், தோட்டச் செடிகள், மலர்ச் செடிகள், மீன், கோழி, ஆடு, மாடு வளர்ப்பு, மது பரிமாறும் உணவகங்கள், 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பைகள் தயாரித்தல் போன்ற தொழில்களுக்கு PMEGP திட்டத்தில் பயன் பெற அனுமதி இல்லை.


