NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் Tax Deduction பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த திட்டம் இந்திய அரசின் ஆதரவுடன் செயல்படுவதால், முதலீடு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்களது ரிஸ்க் ஏற்றுக்கொள்ளும் திறனைப் பொறுத்து, பல்வேறு முதலீட்டு ஆப்ஷன்களில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்தத் திட்டம், பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் பொருந்தும். அவர்களுக்கான சந்தா தொகையை பெற்றோர் அல்லது பாதுகாவலர் செலுத்தலாம். இந்தத் திட்டக் கணக்குகளை வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் உள்ளிட்ட அமைப்புகள் வாயிலாகவும், e-NPS என்ற இணையதளம் வாயிலாகவும் தொடங்கலாம். பாதுகாவலரின் ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றை இருப்பிடத்திற்கான ஆதாரமாக காட்டலாம்


