
கொழும்பு, வாழைத்தோட்ட பகுதியில் உள்ள தண்ணீர் தாங்கியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கைவிடப்பட்ட தண்ணீர் தாங்கியில் இருந்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த தண்ணீர் தாங்கியில் இருந்து 29 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன.

