திருகோணமலையில் விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிவெட்டி -பாரதிபுரத்தைச் சேர்ந்த 68
வயதுடைய நபர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
மூதூர் காவல் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி வைத்தியசாலைக்கு முன்னாள் , கார்
மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியே விபத்து சம்பவித்துள்ளது.
இதையடுத்து, விபத்தில் படுகாயமடைந்த நபர், கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் மூதூர் காவல்துறையினர்
முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

