Last Updated:
Vande Bharat Sleeper Train | வந்தே பாரத் ரயிலில் ஏறி ஆய்வு செய்த பிரதமர் மோடி, அதில் பயணம் செய்யவிருந்த மாணவர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் உரையாடினார்.
நாட்டில் முதல்முறையாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி மேற்குவங்கம், அசாம் மாநிலங்களுக்கு இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக, மேற்குவங்க மாநிலம் மால்டா பகுதிக்குச் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், ஹவுரா முதல் கவுகாத்தி வரையிலான நாட்டின் முதல் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஜல்பாய்குரி – திருச்சி, ஜல்பாய்குரி – நாகர்கோவில், அலிப்பூர் துவார் – பெங்களூரு, அலிப்பூர் துவார் – மும்பை வழித்தடத்திற்கான அம்ரித் பாரத் ரயில் சேவைகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
#WATCH | Malda, West Bengal | Prime Minister Narendra Modi flags off India’s first Vande Bharat Sleeper Train between Howrah and Guwahati (Kamakhya) at Malda Town Railway Station.
(Source: DD) pic.twitter.com/ohvSAoqXSX— ANI (@ANI) January 17, 2026
முன்னதாக, வந்தே பாரத் ரயிலில் ஏறி ஆய்வு செய்த பிரதமர் மோடி, அதில் பயணம் செய்யவிருந்த மாணவர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் உரையாடினார்.


